Tamilaruvy manian biography definition
தமிழருவி மணியன்
தமிழருவி மணியன் (ஆங்கில மொழி: Tamilaruvi Manian) தமிழக அரசியல்வாதியும் எழுத்தாளரும்பேச்சாளரும் ஆவார். இவரது இயற்பெயர் தெய்வசிகாமணி.[1] முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர் இவரை தமிழருவி எனும் பெயரால் பாராட்டினார். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார்.
கல்வி
தமிழருவி மணியன் சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று பட்டம் பெற்றார்.[2] பின்னர் கல்வியியல், சட்டம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
பணி
சென்னை சூளைப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஒற்றுமைக் குழு மேல்நிலைப் பள்ளியில் (Hindu Union Committee Higher Secondary School) சமூக அறிவியல் ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
அரசியல்
இந்திய தேசிய காங்கிரசில்
காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு எனப்பட்ட நிறுவன காங்கிரசு ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றினார்.[1][3]